மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

நடிகை குஷ்பு, இயக்குனர் சுந்தர்.சி இருவரும் அவரவர் துறைகளில் சாதனைகளை படைத்தவர்கள். இந்த தம்பதிகளின் வாரிசுகளான அவந்திகா, அனந்திதா இருவருமே சினிமாவில் நுழையும் முயற்சியில்தான் ஈடுபட்டுள்ளார்கள். அந்த வகையில் சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'தக் லைப்' திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார் அனந்திதா. அதே சமயம் முழங்கால் எலும்பு முறிவால் சிகிச்சை பெற்றுவந்த அவரால் தொடர்ந்து படப்படிப்பில் பணியாற்ற முடியவில்லை... இந்த நிலையில் தக் லைப் படம் வெளியானபோது டைட்டில் கார்டில் உதவி இயக்குனர்கள் பெயர் பட்டியலில் அனந்திதாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து படம் பார்த்த குஷ்பு ரொம்பவே மகிழ்ந்து போய் இயக்குனர் மணிரத்னத்திற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். “ஒரு பெற்றோராக எனது மகளின் பெயரை மணிரத்னம் படத்தில் அதுவும் அவரது உதவியாளர் பட்டியலில் பார்க்கும்போது பெருமிதமாக இருக்கிறது. அவள் காலில் அடிபட்டு சிகிச்சை எடுப்பதற்கு முன்பாக கொஞ்ச காலம் மட்டுமே தக் லைப் படத்தில் பணியாற்றி இருந்தாலும் மறக்காமல் அவளுடைய பெயரையும் டைட்டில் கார்டில் இடம்பெறச் செய்த மணி சாருக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.