மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! | நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரத்தோடு போட்டியிட முடியுமா? சுதா கொங்கரா | மீண்டும் தள்ளிப்போனது 'தெறி' ரீ ரிலீஸ் | மதுரை, திருநெல்வேலி, திருச்செந்துார்... ஜீவா ஓடுவது ஏன்? | மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் அட்லி: 'டான் 3'ஐ இயக்குகிறாரா? | ரவி மோகனின் நிழலாக இருக்கும் கெனிஷா | 35 ஆண்டுகளுக்கு பிறகும் ஹிட்டான 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' | பிளாஷ்பேக்: மறைந்த மலையாள நடிகர் ஜெயனை நினைவு கூறும் ஒரே தமிழ் திரைப்படம் “பூட்டாத பூட்டுக்கள்” | மங்காத்தா, தெறி: ரீரிலீஸ் டிரைலர் மோதல் | தோல்வியை நோக்கி, பிரபாஸின் 'தி ராஜா சாப்' |

சிறிய இடைவெளிக்கு பிறகு மாஸ்டர் மகேந்திரன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் 'பல்ஸ்'. குளோபல் பிக்சர்ஸ் அழகர்ராஜ் ஜெயபாலன் தயாரிக்கிறார். நவின் கணேஷ் இயக்குகிறார். ரிஷிகா ராஜ்வீர், ஆர்.வி.உதயகுமார், லிவிங்ஸ்டன், கும்கி அஸ்வின், கூல் சுரேஷ், கேபிஒய் சேது மற்றும் கேபிஒய் சரத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அபிஷேக் ஏ.ஆர் இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் நவின் கணேஷ் கூறும்போது "அரசு மருத்துவமனைகளின் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க சமூகப் பிரச்னையை ஆராய்வதாக 'பல்ஸ்' கதை த்ரில்லர் படமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் பெரும்பாலும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி, சோளிங்கர் மற்றும் அரக்கோணம் ஆகிய இடங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. போஸ்ட் புரொடக்ஷன் முடியும் தருவாயில் உள்ளதால், விரைவில் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது" என்றார்.




