ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா |

'கும்கி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். அதன்பிறகு சுந்தர பாண்டியன், வேதாளம், பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரேவதி இடத்தை பிடிப்பார் என்று கருதப்பட்ட லட்சுமி மேனன் தனது துடுக்கத்தனமான பேச்சுகளாலும், எளிதில் அணுக முடியாதவராகவும் ஆனதால் வாய்ப்புகளை இழந்தார்.
இந்நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பாரில் மது அருந்தும்போது லட்சுமி மேனனின் நண்பர்களுக்கும், இன்னொரு கும்பலுக்கும் இடையே மோதல் வெடித்தது. தப்பிச் சென்ற அந்த கும்பலை லட்சுமி மேனனின் நண்பர்கள் விரட்டி சென்று, காரை வழிமறித்து அதிலிருந்த ஐடி ஊழியரை கடத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த கும்பலில் நடிகை லட்சுமி மேனனும் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின் வழங்கியது. இந்நிலையில், தன் மீதான ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய கோரி லட்சுமி மேனன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நவம்பர் 7ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. மனுவை ஏற்று கோர்ட் வழக்கை ரத்து செய்யாவிட்டால் லட்சுமி மேனனுக்கு சிறை தண்டனை உறுதி என்கிறார்கள்.