ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

1950கள் வரை படத்தின் தலைப்புகள், தூய தமிழ், அல்லது சமஸ்கிருதம் கலந்த தமிழில்தான் இருக்கும், அபூர்வமாக சில ஆங்கில தலைப்புகளும் வந்திருக்கிறது. இப்போது வைக்கப்படுவது போன்று அதாவது 'காத்துவாக்குல ரெண்டு காதல்' மாதிரியான கலோக்கியலான தலைப்புகள் மிகவும் அரிதானது. இதற்கு முன்னோடி படமாக 'போன மச்சான் திரும்பி வந்தான்' என்ற படத்தை குறிப்பிடுவார்கள்.
முழு நீள நகைச்சுவை படமான இது, துமிலன் எழுதிய 'புனர் ஜென்மம்' என்ற நாவலை தழுவியது. தங்கை மீது பாசம் கொண்ட அண்ணன் அவளுக்கு ஒரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பத்திரிகைகளில் 'மணமகன் தேவை' விளம்பரம் செய்வார். ஆனால் இது பிடிக்காத தங்கை, அண்ணனை விட்டு விலகி விடுவார்.
விளம்பரத்தை பார்த்து வட நாட்டில் இருந்து கதையின் நாயகன் வருவார். பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பி விடுவார். அண்ணனை விட்டு விலகிய தங்கை பின்னர் நாயகனை சந்திப்பார், அவர்தான் தன்னை பெண் பார்க்க வந்தவர் என்ற விபரம் தெரியாமலேயே காதலிப்பார். இருவரும் ஒரு விபத்தில் சிக்க அவர்களை காப்பாற்றும் ஒரு பணக்காரர் அவர்களை கணவன் மனைவி என்று கருதி அவர்களுக்கு உதவுவார். அவர்களும் வேறுவழி இல்லாததால் தங்களை கணவன் மனைவி என்றே கூறிக் கொள்வார்கள். பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இதே போன்ற கதை அமைப்புடன் பின்னாளில் பல கதைகள் வந்திருக்கிறது.
இந்த படத்தில் டி.டி.குசலகுமாரி, ஸ்ரீராம், கே.ஏ.தங்கவேலு, லட்சுமிகாந்த், 'நண்பர்' ராமசாமி, கே.எஸ். அங்கமுத்து, டி.கே.ராமச்சந்திரன், கே.ஆர்.ஜெயகவுரி, ராஜா வஹாப் காஷ்மீரி, ரோஜா, ரங்கநாயகி, கணபதி பட், சம்பத்குமார், சங்கரமூர்த்தி, வேலப்பன், கணேஷ் சிங், வரதா பாய், ருக்மணி மற்றும் சி.பி. கிட்டன் ஆகியோர் நடித்திருந்தார்கள். சி.எஸ்.ராவ் இயக்கி இருந்தார், எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். படம் ஓரளவிற்கான வரவேற்பை பெற்றது.