நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
நடிகர் துல்கர் சல்மான் மலையாளம் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் வே பாரர் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி படங்களையும் தயாரிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் டோமினிக் அருண் இயக்கத்தில் இவர் தயாரித்த லோகா சாப்டர் 1 ; சந்திரா திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர், துல்கர் சல்மான் கம்பெனியில் உதவி இயக்குனராக பணியாற்றும் தினில் பாபு என்பவர் தனக்கு துல்கர் சல்மான் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு பெற்று தருவதாக வரவழைத்து தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடக்க முயற்சித்தார் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து துல்கர் சல்மானின் நிறுவனம் இதுகுறித்து விளக்கம் ஒன்று அளித்துள்ளதுடன் சம்பந்தப்பட்ட உதவி இயக்குனர் தினில் பாபு மீது தங்கள் பங்கிற்கும் காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
இது குறித்து துல்கர் சல்மான் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சம்பந்தப்பட்ட இளம்பெண் குற்றம் சாட்டிய தினில் பாபு எங்களது நிறுவனத்தில் பணியாற்றவில்லை. தவிர எங்களது எந்த படங்களிலும் அவர் இதுவரை பணியாற்றியது இல்லை. எங்களது படங்களுக்கு தேவையான நட்சத்திர தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை எங்களது அதிகாரப்பூர்வமான சோசியல் மீடியா பக்கங்களில் தான் வெளியிடுகிறோம். இதுபோன்று போலியானவர்களின் வாக்குறுதிகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். சம்பந்தப்பட்ட உதவி இயக்குனர் மீது நாங்கள் புகார் அளித்தது கூட இனி இப்படி யாரும் இதுபோன்று மோசடி நபர்களின் ஏமாற்றுக்கு ஆளாகி விடக்கூடாது என்பதற்காகத்தான்” என்று கூறப்பட்டுள்ளது.