தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா | முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் | பிரபுதேவா, வடிவேலுவின் ‛பேங் பேங்' படப்பிடிப்பு நிறைவு | ஜூலை 3ல் ரிலீசாகிறது 'கட்டா குஸ்தி 2' | 4 மாத சிசுவை இழந்த நானா மற்றவர்களின் குடும்பத்தை கெடுப்பேன் : பாடகி கெனிஷா கண்ணீர் | ‛பரிமளா அண்ட் கோ' ரிலீஸ் எப்போ... : முதல் பாடல் வெளியீடு | 'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது | நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் |

சரவணன் இயக்கத்தில் சிம்பு, சனாகான், பிரபு, சந்தானம் உள்ளிட்டோர் நடித்த ‛சிலம்பாட்டம்' படம் புது பொலிவுடன் பிப்ரவரி 6ல் ரீ ரீலீஸ் ஆகிறது. இதற்காக நடந்த விழாவில் டி ராஜேந்தர் பேசியது, ‛‛நான் எத்தனையோ காதல் படங்கள் கொடுத்துள்ளேன். ஆனால், என்னையே வியக்க வைத்த காதல் படம் விண்ணை தாண்டி வருவாயா. காதல் படங்களுக்கு எப்பவுமே மதிப்பு இருக்கும். ரீ ரிலீஸில் பழைய படங்களுக்கும் மவுசு இருக்கிறது என என்பதை அஜித்தின் மங்காத்தா நிரூபித்துள்ளது. அஜித்தின் மங்காத்தாவுக்கு முன் எந்த புதுப்படங்களும் நிற்கவில்லை. எந்த படங்களும் விற்கவில்லை.
என் மகனுக்காக எதை வேண்டுமானாலும் கொடுப்பேன் என கூறிவிட்டு கண் கலங்கிய டி ராஜேந்தர், விஜயின் ஜனநாயகன் வருகிறது என்றால் எனது படத்தை ஒரு வருடம் கூட ஒத்தி வைப்பேன். இணையத்தில் முன்பு மாதிரி டி ராஜேந்தர் பேச முடியவில்லை என்கிறார்கள். இதோ பாடுகிறேன் என
மேடையில் வல்லவன் படத்தில் உள்ள எம்மாடி ஆத்தாடிபாடலை பாடி அசத்தினார்.
பின்னர் இன்று சிம்பு பிறந்த நாள் என்பதால் சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகிகள் முன்னிலையில் டி ராஜேந்தர் கேக் வெட்டி கொண்டாடினர்.