நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
பருமனான உடல் தோற்றத்தால் தொடர்ந்து கேலிக்குள்ளானாலும் தனது திறமையான நடிப்பாலும், அசத்தலான நடனத்தாலும் சின்னத்திரை ரசிகர்கள் மனதை வென்று வருகிறார் நடிகை அக்ஷயா கிம்மி. ஜீ தமிழ் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வரும் அக்ஷயா கிம்மி தற்போது 'புதுப்புது அர்த்தங்கள்' தொடரில் மேடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபகாலங்களில் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் அக்ஷயா, நெகடிவிட்டிகளை புறந்தள்ளிவிட்டு எப்போதும் எனர்ஜிட்டிகாக பதிவுகள் போட்டு வருகிறார். மேலும், அவரது போட்டோஷூட் புகைப்படங்களும் இப்போதெல்லாம் அதிக கவனம் பெற்று வருகின்றன. தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதை முன்னிட்டு, பல நடிகர்/நடிகைகள் சரித்திர கதாபாத்திர கெட்டப்பில் போட்டோஷூட் செய்து வருகின்றனர். அந்த வரிசையில், தன்னையும் இணைத்துக்கொண்ட அக்ஷயா கிம்மி பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி தேவி கெட்டப்பில் அசத்தலான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை சில விஷமிகள் கிண்டலடித்தாலும், சக நடிகைகளான வீஜே பார்வதி, அஞ்சனா ரங்கன், பரீனா ஆசாத், நிவாஷினி திவ்யா உட்பட திரைப்பட நடிகை ப்ரியாமணி என பலரும் பாராட்டி வருகின்றனர்.