தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
கடந்த 2009ல் சத்யம் சினிமாஸ் முதன்முறையாக தயாரித்த திருதிரு துறுதுறு என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜே.எஸ் நந்தினி. அதனை தொடர்ந்து கொலைநோக்கு பார்வை என்கிற படத்தை இயக்கினார். இந்த நிலையில் வெப் சீரிஸ் பக்கம் கவனத்தை திருப்பிய அவர் இன்ஸ்பெக்டர் ரிஷி என்கிற ஹாரர் கிரைம் கலந்த வெப்சீரிஸை இயக்கினார். கடந்த மார்ச் மாதம் வெளியான இந்த வெப்சீரிஸ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த வெப் சீரிஸ் நன்றாகவே இருக்கிறது என தான் கேள்விப்பட்டதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளது இயக்குனர் நந்தினியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் வேட்டையன் படப்பிடிப்பு தளத்தில் அதில் பணியாற்றும் கலை இயக்குனர் கதிர் என்பவர் மூலமாக ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு நந்தினிக்கு கிடைத்தது. அப்போது இன்ஸ்பெக்டர் ரிஷி வெப் சீரிஸ் நன்றாக இருக்கிறது என தான் கேள்விப்பட்டதாக நந்தினியிடம் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.
படப்பிடிப்பில் ரஜினிகாந்த்துடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு நந்தினி பதிவிட்டுள்ளதாவது, “ரஜினியை நேரில் சந்தித்தபோது அவரது எளிமை, அன்பு, அவருடன் நிற்கும்போது அவருடைய ஆரா எல்லாமே நான் கற்பனை செய்து வைத்தது போலவே இருந்தது. இந்த நிகழ்வை எப்போதும் மனதில் வைத்து அசை போடுவேன். இந்த வாய்ப்பை உருவாக்கி தந்த கலை இயக்குனர் கதிருக்கு நன்றி. வேட்டையன் படம் வெற்றி பெற படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.