நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான பிரேமலு மற்றும் மஞ்சும்மேல் பாய்ஸ் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. தமிழகத்தில் உள்ள பல பிரபலங்களும் இந்த படங்களுக்கான பாராட்டுகளை மனம் திறந்து தெரிவித்தனர். கமல், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியதும் நடந்தது. இதில் பிரேமலு படத்தை இயக்குனர் கிரிஷ் ஏடி என்பவர் இயக்கியிருந்தார். அழகான காதல் கதையை நகைச்சுவை கலந்து இன்றைய இளைஞர்கள் ரசிக்கும் விதமாக கொடுத்திருந்தார்.
அதனால் மலையாளத்தை தாண்டி தெலுங்கு மற்றும் தமிழிலும் இந்த படம் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தனது ராஜ்கமல் நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்குமாறு பிரேமலு இயக்குனரிடம் கமல் கேட்டுக் கொண்டதாகவும், அதை அவர் மறுத்து விட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது பிரேமலு படத்தை தயாரித்த அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு தான் தனது அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறி இந்த வாய்ப்பை அவர் நிராகரித்து விட்டதாக சொல்லப்படுகிறது.