'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

பிக்பாஸ் 7வது சீசனில் டைட்டில் வென்றவர் அர்ச்சனா. இதனால் சினிமா வாய்ப்புகள் குவியும் என்று நினைத்தார். ஆனால் அவர் நினைத்தது போல் நடக்கவில்லை. டிமாண்டி காலனி இரண்டாம் பாகத்தில் நடித்தார். அதன்பிறகு சில வெப் தொடர்களிலும், குறும்படங்களிலும் நடித்தார்.
தற்போது சினிமா வாய்ப்பு தேடுவதில் தீவிரம் காட்டி வருகிறார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: பிக்பாஸ் நிகழ்ச்சி எனக்கு அடையாளம் மட்டும் கொடுக்கவில்லை. என்னுடைய முகமூடி இல்லாத அசல் முகத்தையும் பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்த்தது. இந்த விஷயம் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்னும் எனக்கு நெருக்கமானதாக மாற்றியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரு விஷயம் நான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது அமைதி. நான் அதிகம் பேசக்கூடிய நபர். ஆனால், இப்போது எங்கே பேச வேண்டும் எங்கு அமைதியாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். இது என்னுடைய புதிய வெர்ஷனை எனக்கே அறிமுகப்படுத்தியது.
தற்போது முழு கவனமும் நடிப்பில் இருக்கிறது. வழக்கமான கதாபாத்திரங்கள் ஏற்று நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. வலுவான, பல அடுக்குகள் கொண்ட, எமோஷனலான பெண் கதாபாத்திரங்களைத் திரையில் கொண்டு வரவே விரும்புகிறேன். கதை நன்றாக இருந்தால் சினிமா, ஓடிடி இரண்டிலும் நடிப்பேன். மாஸாக நடிப்பதை விட அர்த்தமுள்ள அதேசமயம் பார்வையாளர்களுடன் கனெக்ட் செய்யும்படியான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். என்கிறார்.