அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

தென்னிந்திய மொழிகளில் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் நடிகை நேஹா கவுடா. பெங்களூரை சார்ந்த நேஹா கவுடா ஒரு தியேட்டர் நடிகை. எனவே, அவருக்கு சின்னத்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு எளிதாக கிடைத்தது. தமிழ் சின்னத்திரையில் கல்யாண பரிசு சீரியலின் மூலம் அறிமுகமான நேஹாவை, தமிழ் ரசிகர்களிடம் அதிகமாக கொண்டு சேர்த்த சீரியல் விஜய் டிவியின் பாவம் கணேசன் சீரியல் தான்.
இந்நிலையில் நேஹாவின் காதல் கதை தமிழ் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. கலர்ஸ் கன்னடா டிவியில் நடன போட்டியில் சாந்தனும் - நேஹா கவுடாவும் பங்கேற்றிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய நேஹா, 'நானும் சாந்தனும் பள்ளியிலிருந்து நல்ல நண்பர்கள், அவர் என்னிடம் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே காதலை சொல்லிவிட்டார். முதலில் எனக்கு அது பிடிக்கவில்லை. அதன்பிறகு விரைவிலேயே இருவரும் காதலர்களாக மாறிவிட்டோம்' என கூறியுள்ளார். நேஹா - சாந்தன் ஜோடிக்கு 2018 ஆம் ஆண்டிலேயே திருமணம் முடிந்துவிட்டது. கன்னட தொலைக்காட்சிகளில் ஜோடியாக சுற்றி வரும் இவர்கள் இருவருக்கும் தற்போது தமிழ்நாட்டிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.