பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி | பிளாஷ்பேக்: பிரிந்த இசை அமைப்பாளர்கள் | பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் |

மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி.லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'தாரணி'. புதுமுகம் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகனாக மாரி நடிக்க, கதாநாயகியாக அபர்ணா மற்றும் விமலா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் ஆனந்த், இலக்கியா, இம்ரான், சசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு காயத்ரி குருநாத் இசையமைத்துள்ளார். வெங்கடேஷ் மாவேரிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் ஒரு பெண், சினிமாவில் நடிக்க வரும்போது சந்திக்கும் பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாகி உள்ளது.
இதுகுறித்து இயக்குனர் ஆனந்த் கூறும்போது, "இது என்னுடைய முதல் படம். அதிலும் முற்றிலும் புதியவர்களை வைத்து இந்த படத்தை உருவாக்கியதால் மிகுந்த சிரமங்களுக்கிடையே இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
சினிமா துறையில் ஒரு பெண் எவ்வளவு கஷ்டப்பட்டு மேலே வர போகிறாடுகிறாள் என்பதையும், ஆனால் இந்த திரையுலகில் உள்ள சிலரால் அவள் எவ்வளவு பாதிக்கப்படுகிறாள் என்பதையும் மையமாக வைத்து படம் உருவாகி உள்ளது" என்றார்.