'சேயோன்' படப்பிடிப்பு தொடங்கியது: மதுரை விழாவில் கமல் பங்கேற்பு | நடுநிலையாளர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை: தயாரிப்பாளர்களுக்கு நடிகர் சங்கம் கோரிக்கை | பிளாஷ்பேக்: பத்திரிகையாளர்கள் உருவாக்கிய படம் | பிளாஷ்பேக்: பெண் விடுதலை பேசிய பி.விட்டலாச்சாரியா | பிரதமரின் வேண்டுகோளை ஏற்று வந்தே பாரத்தில் பயணித்த அனுபம் கெர் | சகோதரர் இறந்த துக்கத்தை மறைத்துக்கொண்டு மறுநாளே காமெடி காட்சியில் நடித்த ஊர்வசி | சாமியாடும் ரசிகர்கள்: நடிகர் சூர்யா வேண்டுகோள் | அமைச்சர் ராஜ் மோகனுக்கு செயலாளர் விஷால் எதிர்ப்பு, தலைவர் நாசர் வாழ்த்து | சூர்யாவை உள்ளூரில் சுற்றுலா செல்ல வலியுறுத்திய விஜய் தேவரகொண்டா | மூணாறு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் நடனமாடிய விக்ரம் |

தென்னிந்திய சினிமாவின் முக்கியமான கலை இயக்குனர் தோட்டா தரணி. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். குறிப்பாக ‛நாயகன்' படத்தில் வரும் தாராவி செட், காதலர் தினத்தில் வரும் இன்டர்நெட் கபே, சிவாஜி படத்தில் வரும் பாடல்கள் மற்றும் காட்சிகளுக்கான செட் போன்றவை தத்ரூபமாக இவரது கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டது. இதுதவிர பல்வேறு படங்களில் இவரது கலை இயக்க பங்களிப்பு பெரிதும் பேசப்பட்டது. தேசிய விருது, பல்வேறு மாநில திரைப்பட விருதுகள் என ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில் கலை துறையில் இவரது சேவையை பாராட்டி பிரான்ஸ் கலை மற்றும் கலாசார அமைப்பின் சார்பில் செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நவ., 13ல் நடக்கும் விழாவில் பிரான்ஸ் தூதர், தரணி இந்த விருதை வழங்குகிறார். அன்றைய தினம் தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற உள்ளது.
இதற்கு முன் செவாலிய விருதை தமிழ் சினிமாவில் நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




