கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? |

வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் திரைப்படமான 'ஜூடோபியா' 2016ம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அந்த ஆண்டின் சிறந்த அனிமேஷன் படத்திற்காக ஆஸ்கர் விருதையும் பெற்றது.
இதன் இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பல்வேறு காரணங்களால் வால்ட் டிஸ்னி இரண்டாம் பாகத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது. இந்த நிலையில் அடுத்த மாதம் 28ம் தேதி படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆங்கிலத்துடன் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
முதல் பாகத்தில் ரசிகர்களை குறிப்பாக குழந்தைகளை ஈர்த்த காவல்துறை அதிகாரிகளான ஜூடி ஹாப்ஸ் (ஜின்னிபர் குட்வின் குரல்) மற்றும் நிக் வைல்ட் (ஜேசன் பேட்மேனின் குரல்) ஆகியோர் இந்த பகுதியிலும் தங்கள் சாகசத்தை தொடர்கிறார்கள். இருவரும் கேரி டி'ஸ்னேக் (கே ஹுய் குவானின் குரல்) உடன் இணைகிறார்கள். முதல் பாகத்தை இயக்கிய ஜாரெட் புஷ், பைரன் ஹோவர்ட் ஆகியோரே இதனையும் இயக்கி உள்ளனர்.




