போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் வரும் கதிர் கதாபாத்திரத்தை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அந்த கதாபாத்திரத்தில் மிகவும் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி, காதாபாத்திரமாகவே வாழ்ந்து வருகிறார் குமரன் தங்கராஜன். குமரன் தனது சிறப்பான நடிப்பினால் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். குமரன் நடிகர் என்பதை தாண்டி நல்ல டான்ஸரும் கூட. சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர், தற்போது தனது ரசிகர்களுக்கு ஆன்சைட்டியை கட்டுப்படுத்துவது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'நான் இன்று ஆன்சைட்டிக்கான மாத்திரையை பற்றி உங்களுக்கு சொல்ல போகிறேன். நான் டான்ஸ் ஆடுவதற்காக ஸ்டேஜ் ஏற நினைக்கும் போதெல்லாம் எனக்கு ஆன்சைட்டி ப்ராப்ளம் வரும். அதை விட்டு வெளியில் வர நினைப்பேன். என்னால் முடியாது அப்போதுதான் எனக்கு ஆன்சைட்டியை சரிசெய்யும் மாத்திரை கிடைத்தது. அந்த மாத்திரையின் பெயர் “பயிற்சி” ' என்று கூறியுள்ளார். சமூகவலைதளத்தில் நடன வீடியோக்களை பதிவேற்றி வருவதுடன், பல டிப்ஸ்களையும் தனது ரசிகர்களுக்கு குமரன் வழங்கி வருகிறார். அவரின் இந்த அறிவுரையை பார்க்கும் பலரும் குமரனின் நல்ல மனதை பாராட்டி வருகின்றனர்.