சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வலம் வந்த பாவனா பாலகிருஷ்ணன் மிகக்குறைந்த காலக்கட்டத்திலேயே பல ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பன்னாக இருக்கும் அதேசமயத்தில் புரொபஷனாலாகவும் இருக்கும். அதுதான் அவரது சிறப்பு. சமீபத்தில் விஜய் டிவிக்கு குட் பை சொல்லிவிட்ட பாவனா தற்போது கலர்ஸ் தமிழின் டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.
இந்நிலையில் அவர் தனது 10வது ஆண்டு திருமணவிழாவை சமீபத்தில் கொண்டாடியுள்ளார். தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பாவானா, 'இந்த மனிதனை மிகவும் அரிதாக தான் என் பதிவுகளில் உங்களால் பார்த்திருக்க முடியும்' என்று நக்கலாக கூறியுள்ளார். அதைபார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருவதுடன் திருமணநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.