ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' | 2025 படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' |

சர்வைவர் - சர்வதேச அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியாகும்; அதனை தமிழில் உருவாக்கும் வாய்ப்பை முதல் முறையாக இந்த ஆண்டு பெற்றதன் மூலம், ஜீ தமிழ் தொலைக்காட்சி உலகம் முழுவதும் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
தமிழக நேயர்களின் ரசனைக்கு ஏற்றபடி மாற்றம் செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் விக்ராந்த், உமாபதி, ஐஸ்வர்யா, சரண், நந்தா, விஜயலக்ஷ்மி, லக்கி நாராயண், இனிகோ பிரபாகர், வெனஸ்ஸா க்ரூஸ், அம்ஸத் கான், சிருஸ்டி டாங்கே, பெசன்ட் ரவி, பார்வதி விஜே, காயத்திரி ரெட்டி, ராம் சி, லேடி காஷ், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி மற்றும் இந்திரஜா ஷங்கர் உள்ளிட்ட அற்புதமான 18 பிரபலங்கள் 'சர்வைவர்' பட்டத்தை வெல்வதற்காக களமிறங்கி மோதினர். நடிகர் அர்ஜுன் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உருவெடுத்து, பல்வேறு திருப்பங்களையும், ஆச்சிரியங்களையும் எதிர்கொண்ட போட்டியாளர்கள் அனைவரையும் பரபரப்புடன் சுறுசுறுப்பாக இந்த சீஸன் முழுவதும் வழி நடத்திச் சென்றார்.
கடந்த 90 நாட்களாக போட்டியாளர்களுடன் இணைந்து, நேயர்களும் ஒரு சுவாரஸ்யமான பயணத்தில் பங்கேற்றனர். இந்நாட்களில், போட்டியாளர்கள் வியப்பூட்டும் வகையிலான தைரியத்தையும், தளராத மன உறுதியையும் வெளிப்படுத்தி, சவாலான இலக்குகளை அடைய போட்டியிட்டும், தங்களுக்கு இருந்த மோசமான பயத்தினை எதிர்கொண்டு வென்றும், ஆள்ளில்லாத ஒரு தீவில் கடும் சூழலை எதிர்கொண்டு வாழ்ந்தனர்.
இதுவரை நடைபெற்ற கடுமையான சவால்களை சமாளித்து வந்தவர்களில் முதல் 5 இடங்களில் - உமாபதி, சரண், விஜயலக்ஷ்மி, லக்கி நாராயண், மற்றும் வெனஸ்ஸா க்ரூஸ் ஆகிய போட்டியாளர்கள் உள்ளனர். வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களான நந்தா, அம்ஸத் கான், இனிகோ பிரபாகர், ஐஸ்வர்யா மற்றும் விக்ராந்த், ஆகியோர் நடுவர் குழுவினராக அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சியில் அவர்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால், இறுதிச்சுற்றில் உள்ளவர்களின் எதிர்காலம் இவர்களது கையில் உள்ளது.
நிகழ்ச்சியின் பட்டத்தினை வெல்வதற்காக முழுத் திறனுடன் போட்டியாளர்கள் மோதும் இந்த சூழலில், டிசம்பர் 12, இரவு 9:30 மணி முதல் 11:00 மணிவரை ஒளிபரப்பாகவுள்ள இறுதிச்சுற்றில் - சர்வைவரில் 'சர்வைவர்' என்ற பட்டத்தையும், ரூபாய் 1 கோடியை வெல்லப்போகும் போட்டியாளர் யார் என்பதை ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர். இந்த நிகழ்ச்சியை ஜீ தமிழ் டிவி மற்றும் ஜீ5 ஓடிடி தளத்திலும் காணலாம்.




