டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாள முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப் உள்பட 9 பேர் செய்யப்பட்டனர். இதில் திலீப் மட்டும் ஜாமீனில் விடுதலையாகி உள்ளார்.
இந்த வழக்கு எர்ணாகுளம் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தனி நீதிமன்றத்தில் முறையான விசாரணை நடக்கவில்லை என்றும், வழக்கை திசை திருப்ப முயற்சி நடக்கிறது என்றும் கூறி, பாதிக்கப்பட்ட நடிகை சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் நடிகைக்கு கண்டம் தெரிவித்தது. எந்த அடிப்படையில் தனி நீதிமன்றத்தின் மீது புகார் கூறுகிறீர்கள்? அதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? போலீசிடம் உள்ள ஆதாரங்கள் வழக்கறிஞருக்கு எப்படி கிடைக்கும் என சரமாரி கேள்விகளை கேட்ட நீதிமன்றம் . தனி நீதிமன்றத்தின் மீது தேவையில்லாமல் புகார் கூறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. அதன்பின் மனு மீதான விசாரணையை 29ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.