விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

2020ம் வருடத்திற்கான 68 தேசிய விருது பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன. இதில் சிறந்த நடிகராக முதன்முறையாக சூர்யா தேசிய விருது பெற்றுள்ளார். இதை தொடர்ந்து சூர்யாவுக்கு திரை உலகில் இருந்தும் ரசிகர்களிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மலையாள திரை உலகிலும் முன்னணி நட்சத்திரங்களான மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பலர் சூர்யாவுக்கு தேசிய விருது பெற்றதற்காக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மம்முட்டி தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறும்போது சூர்யாவின் பிறந்தநாளுக்கு கிடைத்த மிக சரியான பரிசு என்று குறிப்பிட்டு வாழ்த்தி உள்ளார். இன்று சூர்யாவின் பிறந்தநாள் என்பதும் அதற்கென்று பரிசு கொடுப்பது போல அவருக்கு தேசிய விருது கிடைத்திருப்பதையும் குறிப்பிட்டு மம்முட்டி வாழ்த்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.