விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் |

கடந்த வருடம் மலையாளத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் 'மார்கோ' திரைப்படம் வெளியானது. 100 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் ஹீரோ உன்னி முகுந்தனும் அதில் நடிப்பதை அதை உறுதி செய்திருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவிர்க்க முடியாத சில காரணங்களால் மார்கோ இரண்டாம் பாகத்தில் தான் நடிக்கவில்லை என்றும் அறிவித்தார். இதனால் அந்த படம் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் நிச்சயமாக 'மார்கோ 2' உருவாகும் என்று தொடர்ந்து சொல்லி வந்தார்.
அது மட்டுமல்ல சமீபத்தில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு 'லார்ட் மார்கோ' என்கிற டைட்டிலையும் அறிவித்தார். ஏற்கனவே இவர்களது தயாரிப்பில் 'கட்டாளம்' என்கிற படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது கட்டாளன் படத்தை தொடர்ந்து மம்முட்டி நடிக்கும் புதிய படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக போஸ்டருடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார். உன்னி முகுந்தன் மார்க்கோ இரண்டாம் பாகத்தில் நடிக்காத நிலையில் அதை தற்சமயம் ஒதுக்கி வைத்துவிட்டு மம்முட்டி படத்தை தயாரிக்க அவர் முடிவு செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.