நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் கடந்த 2018ல் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான 'ஆதி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து '19ம் நூற்றாண்டு, ஹிருதயம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த வருடம் வெளியாகி மம்முட்டியின் வித்தியாசமான தோற்றத்தையும் நடிப்பையும் வெளிப்படுத்திய 'பிரம்மயுகம்' படத்தின் இயக்குனர் சகாதேவன் இயக்கி வரும் 'டயர்ஸ் இரே' என்கிற படத்தில் தற்போது நடித்து வருகிறார் பிரணவ் மோகன்லால்.
பிரம்மயுகம் படம் போலவே இந்த படமும் ஒரு ஹாரர் திரில்லர் படமாக தான் உருவாகி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலரில் மோகன்லால் குரல் ஒலிக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் மோகன்லாலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்கிற யூகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு முன்னதாக பிரணவின் முதல் படமான ஆதி திரைப்படத்திலும் மோகன்லால் சில நொடிகள் வந்து போகும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.