விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு | பிளாஷ்பேக்: அந்தக் கால 'மிடில் கிளாஸ்' | அப்பாவுக்கு என்னாச்சு? கவுதம் ராம் கார்த்திக் விளக்கம் | அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் |

மலையாளத்தில் சமீபத்தில் பிரித்விராஜ் நடிப்பில் கடுவா என்கிற திரைப்படம் வெளியாகி ஓரளவு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கி உள்ளார். இதைத்தொடர்ந்து பிரித்விராஜ் நடிப்பில் உருவாகும் காப்பா என்கிற படத்தையும் இயக்குனர் ஷாஜி கைலாஷ் தற்போது இயக்கி வருகிறார்.
இந்த படம் மலையாள திரையுலக இயக்குனர் சங்கத்திற்கு நிதி திரட்டும் விதமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகி இருந்த நிலையில் அவர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக சமீபத்தில் சிறந்த நடிகைக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்ட சூரரைப்போற்று நாயகி அபர்ணா பாலமுரளி நடிக்க உள்ளார்.
தற்போது தமிழில் அஜித் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிப்பதுடன் மற்றும் சில படங்களில் கதாநாயகியாக பிஸியாக நடித்து வருகிறார் மஞ்சு வாரியர். காப்பா திரைப்படத்தை இதற்குமுன் வேறு ஒருவர் இயக்குவதாக இருந்து சில காரணங்களால், தற்போது ஷாஜி கைலாஷ் இந்த படத்திற்கு இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார். இதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக படப்பிடிப்பு தேதிகள் மாறியதால், மஞ்சு வாரியர் இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்கமுடியாத நிலையில் இந்த படத்தில் இருந்து வெளியேறி உள்ளதாக சொலப்படுகிறது..




