பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

தனுஷ் நடித்த அசுரன் படத்தில் அவரது மனைவியாக நடித்திருந்த மலையாள நடிகை மஞ்சுவாரியர், தற்போது துணிவு படத்தில் அஜித்துடன் நடித்துள்ளார். மலையாளத்தில் பெரும்பாலும் மென்மையான வேடங்களில் நடித்துள்ள மஞ்சு வாரியர், இந்த படத்தில் முதன்முறையாக ஆக்சன் ரோலில் நடித்திருந்தார்.
இது குறித்து மஞ்சு வாரியார் கூறுகையில், முதல் முறையாக துணிவு படத்தில் தான் ஆக்ஷன் வேடத்தில் நடித்திருக்கிறேன். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது மிக்க மகிழ்ச்சி. அதோடு கேரளாவில் இந்த படத்தை ரசிகர்களுடன் தியேட்டரில் பார்த்து ரசித்தேன். இப்படத்துக்கு ஆதரவு கொடுத்த எல்லா ரசிகர்களுக்கு நன்றி என்று தெரிவித்திருக்கும் மஞ்சு வாரியர், துணிவு படத்தை தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் அமர்ந்து பார்க்க தான் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் துணிவு படம் தென்னிந்திய முழுக்க வெற்றி பெற்றிருப்பதால் அந்த வெற்றியை பகிர்ந்து கொள்ள துணிவு படக்குழு மஞ்சுவாரியருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். இதனால் ஜனவரி 20ம் தேதி கேரளாவில் இருந்து அவர் சென்னைக்கு வரப்போகிறார். அதோடு அன்றைய தினம் மஞ்சுவாரியர் நடித்துள்ள ஆயிஷா என்ற படமும் திரைக்கு வருகிறது.




