'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான மகேஷிண்டே பிரதிகாரம் என்கிற படத்தின் மூலம், தான் அறிமுகமான காலகட்டத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அபர்ணா பாலமுரளி. தமிழில் எட்டு தோட்டாக்கள், சர்வம் தாள மயம் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் சுதா கொங்கர இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தபின் தென்னிந்திய அளவில் அனைவருக்கும் தெரிந்த நடிகையாக மாறினார்.
இந்த படத்தில் அவர் நடித்த பொம்மி கதாபாத்திரத்திற்கு அப்போதே ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், தற்போது அதை உறுதி செய்யும் விதமாக அந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சமீபத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது..
கடந்த மாதம் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் அபர்ணா பாலமுரளி. அந்த படமும் வெற்றி பட வரிசையில் இணைந்த நிலையில், தற்போது தேசிய விருதும் இவரை தேடி வந்துள்ளதால் முன்னணி நடிகைகள் வரிசைக்கு உயர்ந்துள்ளார் அபர்ணா பாலமுரளி.
அந்த வகையில் தற்போது அபர்ணாவின் மீது வெளிச்சம் விழுந்துள்ள நிலையில், அதையெல்லாம் பயன்படுத்திக்கொள்ள நினைக்காமல், இவர் மலையாளத்தில் நடித்து வந்த சுந்தரி கார்டன்ஸ் என்கிற திரைப்படம் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸாக இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் காமெடி நடிகரான நீரஜ் மாதவ் என்பவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் அபர்ணா பாலமுரளி.