பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
வரும் டிசம்பர் 13 முதல் 'பேரன்பு' மற்றும் 'தெய்வம் தந்த பூவே' ஆகிய இரண்டு புத்தம் புதிய நெடுந்தொடர்களை அறிமுகம் செய்கிறது ஜீ தமிழ் தொலைக்காட்சி.
மாமியாரின் இடத்தில் ஒரு தாயைப் பெறும் பெண்கள் அனைவரும் பாக்கியசாலிகள் என்கிற நம்பிக்கைக்கு உயிரூட்டும் விதமாக ஜீ தமிழ், புதிய தொடர்களை வழங்கவுள்ளது. தலைப்பிலேயே அன்பைத் தாங்கி வரும் 'பேரன்பு', வழக்கத்திற்கு மாறான மாமியார் - மருமகள் உறவினைக் காட்டும் அன்பான ஒரு இனிய குடும்பத் தொடராகும்.
இதில் பழம்பெரும் நடிகை ஷமிதா ஸ்ரீகுமார் மற்றும் வைஷ்ணவி அருள்மொழி ஆகியோர் முறையே மாமியார், மருமகள் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல கட்டிடக்கலை வல்லுநரான கார்த்திக்குடன், பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட ஒரு திருமண உறவினை துவங்கும் - கடவுள் நம்பிக்கையும், நல்ல மனதும் கொண்ட பெண்ணான வானதியின் வாழ்க்கையே இத்தொடரின் கதைக்களமாகும். கார்த்திக் கதாபாத்திரத்தில் விஜய் வெங்கடேசன் நடிக்கிறார். இருப்பினும், குணாதிசயங்களில் உள்ள வேறுபாடுகளின் காரணமாகத் தம்பதிகள் இருவருக்கும் இடையில் ஒரு அசவுகரியம் நிலவுவதை உணர்கிறார், மாமியார் ராஜ ராஜேஸ்வரி. மணமகன் இல்லத் தலைவியான அவர், வானதியின் மீது தன் மகனுக்குக் காதலை உணரவைக்கும் பொறுப்பினை ஏற்கிறார். இத்தொடரானது, வருகின்ற டிசம்பர் 13 முதல் திங்கள் முதல் சனி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
டிசம்பர் 13 முதல் மதியம் 2:30 மணிக்கு மற்றொரு தொடரான 'தெய்வம் தந்த பூவே' ஒளிபரப்பாகும். வாழ்வில் தடைகளைக் கடந்து தைரியமாக உலகினை எதிர்கொள்ளும், தளராத மனமுடைய சிங்கப்பெண்ணான மித்ராவின் கதையை இத்தொடர் நேயர்களுக்குக் கூறவுள்ளது. எதிர்பாராமல் வினயை சந்திக்கும் மித்ரா, விதிவசத்தால் திசைமாறிய அவனது வாழ்க்கையைத் தனது நெறிகளால் மாற்றுகிறாள். 'நல்ல மனிதர்களே வாழ்வில் அதிக சோதனைகளுக்கு ஆளாவார்கள்' என்பதற்கு ஏற்ப மித்ராவும் தனது கடந்த காலத்தில் ஒரு கஷ்டத்தினைக் கடந்தே வந்திருக்கிறாள், ஆனால் அந்த மோசமான காலத்தின் தாக்கம் இப்போதும் அவளைத் தொடர்கிறது. அவள் தனது இக்கட்டான சூழ்நிலையை எப்படிச் சமாளிக்கிறாள் என்பதே கதையின் போக்கினை நிர்ணயிக்கிறது.
தனது நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை மேம்படுத்தும் இலட்சியத்துடன், தைரியமும், அன்பும் நிறைந்த பெண்ணான மித்ரா கதாபாத்திரத்தில் நிமிஷா செங்கப்பா நடிக்கிறார். மேலும், ஒரு நேர்மையான பணக்கார ஆணான வினய் கதாபாத்திரத்தில் அம்ருத் கலாம் நடிக்க, பழம்பெரும் நடிகர் பாம்பே ஸ்ரீதரன் - டாக்டர் ராமகிருஷ்ணனாக நடிக்கிறார்.
டிசம்பர் 13 முதல் சுவாரஸ்யமான பேரன்பு மற்றும் தெய்வம் தந்த பூவே தொடர்களை ஜீ தமிழ் தொலைக்காட்சி மற்றும் Zee5 ஓடிடி தளத்திலும் கண்டு மகிழுங்கள்.