நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஹேமா. இன்று இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால், இவர் கிட்டத்தட்ட இதற்காக பல வருடங்கள் உழைத்திருக்கிறார். மயிலாடுதுறையில் பிறந்து, வளர்ந்து அங்கேயே கல்லூரி படிப்பை நிறைவு செய்தார் ஹேமா. முதன் முதலில் லோக்கல் சேனலில் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணிக்குச் சேர்ந்தார். அதன் பின் வசந்த் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். இதன் மூலம் அவருக்கு கிடைத்த திரைவெளிச்சம் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. தமிழ் சினிமாவில் ஆறாது சினம், சவரக்கத்தி, வீரையன் மற்றும் இவன் யார் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையில் சின்னத்திரையும் ஹேமாவை வரவேற்க, விஜய் டிவியின் ஆபிஸ் சீரியல் மூலம் தொலைக்காட்சி நடிகையானார். தொடர்ந்து பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம், மெல்ல திறந்தது கதவு போன்ற ஹிட் சீரியல்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் ஹேமாவை செலிபிரேட்டி அளவுக்கு பிரபலமாக்கியது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான். ஹேமா கர்ப்பமாக இருந்த போது சீரியலில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரசவத்திற்கு முன்பு வரை சீரியலில் நடித்தார். அதேபோல் பிரசவத்திற்கு பிறகும் மூன்றே மாதங்களில் மீண்டும் நடிக்க வந்துவிட்டார். தனது கேரியரில் மேடு பள்ளங்களை தாண்டி வந்துள்ள ஹேமா எப்போதுமே சீன் போடுவதில்லை. அவரது இயல்பான குணம் தான் ரசிகர்களை பெரிதாக கவர்ந்துள்ளது.