சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு |

நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது என்பதை அவர்களே உறுதி செய்தனர்.
இதற்கிடையில் ரஜினி குறுகிய கால கட்டத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தை இயக்குவதற்காக சுந்தர்.சி உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்கிறார்கள். 1997ல் ரஜினி நடித்த 'அருணாச்சலம்' படத்தை சுந்தர்.சி இயக்கி இருந்தார். இவர்கள் கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் 28 ஆண்டுகளுக்கு பிறகு இணைவர்.
மேலும், மறுபக்கம் தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி உடனும் ரஜினிக்கு தகுந்தவாறு கதை உள்ளதா என ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.