நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
திரையரங்கில் தீபாவளி பண்டிகையையொட்டி புதுவரவுகள் வரவுள்ளன. இதேபோல் இந்த வார வீட்டிலிருந்தே தீபாவளி பண்டிகையைக் கொண்டாட நினைக்கும் ரசிகர்களுக்கு ஓடிடி தளத்தில் தண்டகாரண்யம் முதல் பல திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
தண்டகாரண்யம்
இயக்குநர் ஆதியன் அதிரை இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ், கலையரசன், ரித்விகா, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'தண்டகாரண்யம்'. வித்தியாசமான கதைக்கருவுடன் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற 20ம் தேதி தீபாவளி பண்டிகையன்று சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மட்டக்குதிரை
உருவத்தில் சிறியதாக இருக்கும் மட்டக்குதிரைகள் குறித்த ஆவணப்படம் தான் இந்த'மட்டக்குதிரை'. இந்த திரைப்படம் இன்று(16ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
கிஷ்கிந்தாபுரி: ரேடியோ ஸ்டேசன்
தெலுங்கு நடிகர் சாய்ஸ்ரீனிவாஸ், நடிகை அனுபமா பரமேஸ்வரி நடிப்பில் வெளியான திரைப்பம் 'கிஷ்கிந்தாபுரி; ரேடியோ ஸ்டேசன்'. திகில் கதைக்களத்தைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படம் நாளை(17ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Aabhyanthara Kuttavaali
மலையாள நடிகர் ஆசிப் அலி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'Aabhyanthara Kuttavaali'. காமெடி ஜானரில் வெளிவந்த இந்த திரைப்படம் நாளை(அக்.17ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
முதல் பக்கம்
நடிகர் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்'முதல்பக்கம்'. இயக்குநர் அனிஷ் அஷ்ரப் இந்த படத்தை இயக்கி இருந்தார். கிரைம் கதைக்களத்தைக் கொண்டுள்ள இந்த திரைப்படம் நாளை(அக்.17ம் தேதி) ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
மாயப்புத்தகம்
நடிகர் ஸ்ரீகாந்த், அபர்ணதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'மாயப்புத்தக்கம்'. இயக்குநர் ராம ஜெயபிரகாஷ் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார். படத்தின் பெயருக்கு ஏற்றார் போல், வித்தியாசமான கதைக்களத்துடன் இந்த திரைப்படம் வெளியான நிலையில், நாளை(அக்.17ம் தேதி) சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.