சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாள முன்னணி நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் திலீப் மட்டும் ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்.
இந்த வழக்கு தற்போது இறுதிகட்டத்துக்கு வந்திருக்கிறது. இதன் விசாரணை நேற்று கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 3 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நடிகர் திலீப் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நடிகையின் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: பலாத்கார காட்சிகள் பலரிடம் இருப்பதாக சந்தேகம் உள்ளது. இந்த காட்சிகள் வெளியானால் எனது வாழ்க்கையை அது மிகக் கடுமையாக பாதிக்கும். கடந்த 5 வருடங்களாக நான் இருட்டில் தவித்து வருகிறேன்.
பாதிக்கப்பட்டவர்களை சமூகம் அங்கீகரிக்காத சூழ்நிலை நிலவி வருகிறது. விசாரணை அதிகாரிகள் சேகரித்த ஆதாரங்களில் யார் முறைகேடு செய்தாலும் அது மிகவும் ஆபத்தாகும். எனவே நீதியை நிலைநாட்டுவதற்காக முறையான விசாரணை நடத்தாமல் குற்றப்பத்திரிகை வழங்கக் கூடாது. இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார். வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது நீதிமன்றம்.




