சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? |

மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது அறிமுக நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்தார். சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் தப்பிச் சென்ற விஜய்பாபு தற்போது திரும்பி வந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பந்தப்பட்ட நடிகையின் சம்மத்துடன் தான் எல்லாம் நடந்தது. தற்போது திடீரென புகார் அளித்துள்ளார். இதற்கு பின்னால் சதி உள்ளது. கோர்ட்டில் நான் நிரபராதி என்று நிரூபிப்பேன் என்று விஜய்பாபு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வழக்கு தொடர்ந்த அந்த நடிகை, வழக்கை வாபஸ் பெற விஜய்பாபு தரப்பில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது: புகாரை வாபஸ் பெறுமாறு விஜய்பாபுவின் நண்பர் என்னிடம் பேசினார். நான் மறுத்துவிட்டேன். ஒரு கோடி ரூபாய் வரை தருவாகவும் அவர் சொன்னார். புகாரை வாபஸ் பெற மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டேன். என்று கூறியிருக்கிறார்.