நிம்மதியா வாழ விடுங்க : நடிகர் பாலாவின் மூன்றாவது மனைவிக்கு நான்காவது மனைவி எச்சரிக்கை | எம்புரான் ரிலீஸில் புதிய சிக்கல் : லைகாவை ஒதுக்கிவிட்டு ரிலீஸ் செய்ய திட்டம்? | ஜவான் படத்தை மறுத்தது ஏன்? : மலையாள இளம் நடிகர் விளக்கம் | லோகேஷ் 40 ரஜினி 50 அமீர்கான் 60 : கூலி படக்குழு உற்சாக கொண்டாட்டம் | குட் பேட் அட்லி டீசர் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ஆதிக் | லோகேஷ் பிறந்தநாளில் வெளியிட்ட கூலி புகைப்படங்கள் | நான் சினிமாவில் நீடிக்க பாக்யராஜ்தான் காரணம் : சாந்தினி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் தர்ஷன் | உபாசனா நடிக்கும் 'எனை சுடும் பனி' | பிளாஷ்பேக் : பிரபு, கார்த்திக் நடிக்க மறுத்த படத்தில் நடித்த விஜயகாந்த் |
வளர்ந்து வரும் கன்னட நடிகர் சதீஸ் வஜ்ரா. லகோரி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர் தற்போது சில படங்களில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வந்தார். 36 வயதான சதீஸ் வஜ்ரா பெங்களூரு ஆர்ஆர் நகரில் வசித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவரது காதல் மனைவி தற்கொலை செய்து கொண்டார். அன்று முதல் சதீஸ் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்குள் புகுந்த 2 மர்மநபர்கள் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்கள். ரத்தவெள்ளத்தில் மிதந்த சதீஸை கண்ட வீட்டு வேலைக்கார பெண் போலீசுக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சதீஸ் வீட்டு முன் இருந்த சிசிடிவி கேமராவில் கொலையாளிகளின் முகமும், அவர்கள் சதீஷின் பைக்கை எடுத்துச் சென்றதும் பதிவாகி உள்ளது. அதைக் கொண்டு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். சதீசின் மனைவி தற்கொலைக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் கன்னட சினிமா உலவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.