'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து 'தாய் கிழவி' படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் 'சேயோன்' என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இதை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. முதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இருதினங்களுக்கு முன் படத்தின் அறிவிப்பு வீடியோ உடன் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ‛மாயோன்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான டபுள் மீனிங் புரொடக்ஷன், தாங்கள் 2023ம் ஆண்டிலேயே ‛சேயோன்' படத்தை தலைப்பை பதிவு செய்துள்ளதாகவும், மாயோன் படத்தின் இரண்டாம் பாகமாக சேயோன் படத்தை எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளது.
இதன்காரணமாக சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் எழுந்துள்ளது.