அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் விஜய் பாபு தலைமறைவானார். மேலும் நடிகை தன்னை பிளாக்மெயில் செய்வதற்காக பாலியல் புகார் கொடுத்திருப்பதாக அவர் கூறினார். இதற்கிடையே கேரள உயர்நீதிமன்றத்தில் விஜய் பாபு தரப்பிலிருந்து முன் ஜாமின் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது விஜய் பாபு விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து துபாயில் இருந்து கேரளா திரும்பிய விஜய்பாபு, விசாரணைக்கு ஆஜரானார். அப்போது பல்வேறு தகவல்களை அவர் வாக்குமூலம் அளித்தார். இதனிடையே வழக்கை வாபஸ் பெறும்படி, விஜய்பாபு தனது நண்பர்கள் மூலம் பேரம் பேசியதாக பாலியல் புகார் கூறிய நடிகை குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் விஜய் பாபுவிற்கு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. அதோடு விசாரணைக்காக ஜூன் 27ம் தேதி விசாரணை அதிகாரி முன் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டு சில நிபந்தனைகளையும் விதித்தார்.