'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கொரோனா தொற்று காரணமாக திரைப்படத்துறை பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது சினிமாத்துறை முன்பைவிட அதிக வேகத்தில் வசூலை குவித்து வருகிறது. தெலுங்கு சினிமாவில் புஷ்பா, ஆர்ஆர்ஆர் படங்கள் கோடிகளை குவித்தது. கொரோனா காலத்தில் சம்பள உயர்வு எதையும் தொழிலாளர்கள் பெறவில்லை.
சினிமா தொழிலாளர்களுக்கு 3 வருடத்துக்கு ஒரு முறை ஊதியம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த 4 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது சினிமாவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாலும், விலைவாசி உயர்வு காரணமாகவும் தங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தரவேண்டும் என்று தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் கூறிவந்தனர்.
இந்நிலையில், தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி, இன்று (ஜூன் 22) முதல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் தெலுங்கு படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதோடு, ஐதராபாத்தில் நடந்து வரும் தமிழ் படத்தின் படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது.