'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் |

வெற்றிபெற்ற படங்களுக்கு இரண்டாம் பாகம் உருவாக்கும் சீசன் தற்போது மலையாளத்திலும் துவங்கியுள்ளது. அந்தவகையில் நிவின்பாலி நடித்த ஆக்சன் ஹீரோ பைஜூ என்கிற படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் நிவின்பாலி நடித்த, கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான 1983 என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் அப்ரிட் ஷைன். முதல் படத்திலேயே இந்த கூட்டணி வெற்றி பெற்றதால், அடுத்ததாக 2016ல் மீண்டும் நிவின்பாலி நடிப்பில் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என்கிற வித்தியாசமான போலீஸ் படத்தையும் இயக்கினார் அப்ரிட் ஷைன்.
வழக்கமான அதிரடி போலீஸ் படங்கள் போல அல்லாமல் ஒரு நகரத்தில் அன்றாடம் நடக்கும் குற்றங்களும் அவற்றின் மீது ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் நடவடிக்கைகளும் என புதிய பாணியில் கதை சொல்லியிருந்தார்கள். இந்தப்படத்தை நிவின்பாலியே தயாரித்திருந்தார். துப்பறிவாளன், நம்ம வீட்டுப்பிள்ளை படங்களில் கதாநாயகியாக நடித்த அனு இம்மானுவேல் இந்தப்படத்தில் தான் நிவின்பாலிக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானார். முதல் பாகத்தில் இடம்பெற்றவர்களே இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்வார்களா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.