எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
நடிகர் நிவின்பாலி நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான வருஷங்களுக்கு சேஷம் படம், தொடர் தோல்விகளில் துவண்டிருந்த அவரை வெற்றி ஏணி மூலம் மேலே ஏறி வர உதவியிருக்கிறது. அந்த படத்தில் அவர் இடைவேளைக்கு பின் தான் வருகிறார் என்றாலும் படத்தின் நாயகர்களாக பிரணவ் மோகன்லால் மற்றும் தியான் சீனிவாசன் என இருவர் இருந்தாலும் கூட மொத்த படமும் இடைவேளைக்குப் பிறகு நிவின்பாலி கைவசம் சென்றுவிட்டது. அந்த வகையில் இந்த படத்தின் மூலம் கம் பேக் கொடுத்துள்ள நிவின்பாலிக்கு அவர் நடித்துள்ள மலையாளி பிரம் இந்தியா திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஜன கன மன என்கிற படத்தின் மூலம் பரபரப்பு ஏற்படுத்திய இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
மலையாளத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழில் வரவேற்பையும் வசூலையும் பெற்று வரும் நிலையில் இந்த மலையாளி பிரம் இந்தியா படத்தை மலையாளத்தில் மட்டுமே வெளியிடுவதாகவும் வேறு எந்த மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப் போவதில்லை என்றும் படத்தின் இயக்குனர் டிஜே ஜோஸ் ஆண்டனி கூறியுள்ளார். தனது முந்தைய படமான ஜன கன மன படம் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்றாலும் கூட இந்த படம் ஒரு சராசரி மலையாளி கதையாக உருவாகி இருப்பதால் மலையாளத்தில் பார்த்து ரசிப்பது தான் சரியாக இருக்கும் என நாங்கள் முடிவு செய்ததால் மலையாள மொழியில் மட்டுமே இந்த படத்தை வெளியிடுகிறோம் என்று கூறியுள்ளார்.