அஞ்சான் : ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

மலையாள திரையுலகில் 70 வயதை தாண்டியும் கூட தற்போதும் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவரது நிஜப்பெயர் முகமது குட்டி என்பது தான். ஆனால் சினிமாவுக்காக மம்முட்டி என பெயர் மாற்றிக் கொண்டார். அதேசமயம் எப்படி இவருக்கு இந்த பெயர் வந்தது என்று பலருக்கும் ஆச்சரியம் இருக்கும். அந்த பெயர் எப்படி உருவானது என்பதை கூறியதுடன், அப்படி அந்த பெயரை தனக்கு சூட்டிய தனது நண்பனையும் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் முதன்முறையாக மேடை ஏற்றி அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் நடிகர் மம்முட்டி. அவர் வேறு யாருமல்ல மம்முட்டியின் கல்லூரி காலத்தில் அவரது கிளாஸ்மேட் ஆக இருந்த நண்பர் சசிதரன் என்பவர் தான்.
மம்முட்டி என்கிற பெயர் தனக்கு எப்படி வந்தது என்பது குறித்து மம்முட்டி கூறும்போது, “கல்லூரியில் படிக்கும்போது என்னுடைய முகமது குட்டி என்கிற பெயரை மற்றவர்களிடம் சொல்வதற்கு நான் ரொம்பவே சங்கடப்பட்டேன். அதனால் அனைவரிடமும் என்னுடைய பெயர் ஓமர் ஷெரீப் என கூறி அறிமுகப்படுத்திக் கொண்டேன். எல்லோரும் என்னை ஒமர் என்று தான் அழைத்து வந்தார்கள். ஒரு நாள் பாக்கெட்டில் இருந்த என்னுடைய ஐடி கார்டு தவறி விழுந்தபோது அதை ஏதாச்சையாக எடுத்த நண்பர் சசிதரன் என் பெயரை படித்ததும் ஒரு வேகத்தில் நீ ஒமர் இல்லையா ? அப்படி என்றால் உன் பெயர் மம்முட்டி தானே என்று கூறினார்.
அப்போது இருந்து என்னுடைய நண்பர்கள் மத்தியில் மம்முட்டி என்கிற பெயரே பதிந்துவிட்டது. அதுவே என்னுடைய திரையுலக பயணம் தொடங்கியபோதும் இப்போது உங்கள் முன் நிற்கும் வரையில் ஒரு அடையாளமாக மாறிவிட்டது. பல பேர் எனக்கு தாங்கள் தான் இந்த பெயரை சூட்டினோம் என்பது போல அவ்வப்போது கூறுவார்கள். ஆனால் எனக்கு தெரிந்து எனக்கு இந்த பெயரை வைத்தது இந்த நண்பர் சசிதரன் தான். இத்தனை நாட்களாக ஒரு சர்ப்ரைஸ் ஆக இவரை நான் ஒளித்து வைத்திருந்தேன்” என்று கூறினார்.
மம்முட்டியின் நண்பரும் தயாரிப்பாளருமான ஆண்டோ ஜோசப் இந்த நிகழ்வு குறித்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, இந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரையும் பார்த்தபோது கத பறயும்போல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தான் எனக்கு நினைவுக்கு வந்தது என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.