நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

கடந்த 2021ல் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் போயபட்டி சீனு இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'அகண்டா'. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'அகண்டா 2' தயாராகியுள்ளது. இந்த படத்தையும் இயக்குனர் போய்பட்டி சீனுவே இயக்கியுள்ளார். வரும் டிசம்பர் 5ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' திரைப்படம் வெளியானபோது அதன் ரிலீஸ் தினத்தன்று ரசிகர்கள் சிலர் தியேட்டருக்கு வெளியே பாலகிருஷ்ணாவின் பேனர் முன்பாக ஆட்டுக்கிடாய் ஒன்றை வெட்டி பலி கொடுத்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகின. பொதுமக்களிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தின.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற 'அகண்டா 2' புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாலகிருஷ்ணா, “தயவுசெய்து ரசிகர்கள் எனது திரைப்பட வெளியீட்டின் போது தியேட்டருக்கு வெளியே நேர்த்திக்கடன் என்கிற பெயரில் இது போன்று உயிர் பலியை மேற்கொள்ள வேண்டாம். கொண்டாட்டங்கள் என்கிற பெயரில் இப்படி விலங்குகளை துன்புறுத்த வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். பாலய்யாவின் தீவிர ரசிகர்கள் அவரது பேச்சை பின்பற்றுவார்கள் என நம்புவோம்.