இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு |

தெலுங்கு திரையுலகில் சீனியர் நடிகர் என்றாலும் இப்போதும் இளம் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் கதாநாயகனாகவே நடித்து வருபவர் பாலகிருஷ்ணா. இன்னொரு பக்கம் அரசியலிலும் கவனம் செலுத்தி வரும் இவர், தொடர்ந்து மூன்று முறை ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் இருக்கும் ஹிந்துபூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது மூன்றாம் முறையும் மக்கள் தன்னை ஹிந்துபூர் தொகுதிக்கு தேர்ந்தெடுத்துள்ளதால் அங்கேயே புதிதாக சொந்த வீடு கட்டி குடியேற முடிவு செய்துள்ளார் பாலகிருஷ்ணா.
இதனை தொடர்ந்து அங்கே தற்போது வீடு கட்டுவதற்கான பூமி பூஜையையும் நேற்று நடத்தி உள்ளார் பாலகிருஷ்ணா. என்னுடைய தந்தை என்.டி ராமராவ் 1985ல் இதே தொகுதியில் போட்டியிட்டு வென்று தான் முதலமைச்சர் ஆனார். அப்படிப்பட்ட மக்களின் அன்புக்குரிய தொகுதியில் நான் புதிதாக வீடு கட்டுவதில் பெருமைப்படுகிறேன். இனி என்னுடைய புதிய விலாசம் ஹிந்துபூர் ஆகத்தான் இருக்கும்” என்று கூறியுள்ளார்.