ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

தெலுங்கு திரையரங்கில் சிரஞ்சீவியின் உறவினரும் அவரது சகோதரியின் கணவருமான தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் இளைய மகன் அல்லு சிரிஷ். தனது அண்ணன் அல்லு அர்ஜுனை போல இவரும் சினிமாவில் நுழைந்து படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ராதாமோகன் இயக்கிய 'கவுரவம்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு நயனிகா ரெட்டி என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.
வரும் மார்ச் 6ம் தேதி இவரது திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் துபாயில் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது அழைப்பிதழ் விநியோகிக்கும் வேலையில் அல்லு சிரிஷ் இறங்கியுள்ளார். அந்த வகையில் முதல் திருமண பத்திரிக்கையை தெலுங்கு சம்பிரதாய முறைப்படி தாய் மாமாவான சிரஞ்சீவி-சுரேகா தம்பதிக்கு கொடுத்திருக்கிறார் அல்லு சிரிஷ்.