''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பிரபல மலையாள தயாரிப்பாளரும் குணச்சித்திர நடிகருமான விஜய்பாபு மீது துணை நடிகை ஒருவர் கடந்த ஏப்ரல் 22ம் தேதி காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி பலமுறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அடித்து துன்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்த விஜய்பாபு சமூக வலைதளத்தில் வீடியோ மூலமாக சம்பந்தப்பட்ட நடிகையின் அடையாளத்தையும் வெளிப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து அவர் மீது அடுத்தடுத்து இரண்டு வழக்குகள் பதியப்பட்ட நிலையில் அவர் போலீஸில் கைதாவதை தவிர்க்க வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். தொடர்ந்து ஐந்து வாரங்களாக தலைமறைவாக இருந்த அவர் அங்கிருந்தபடியே முன் ஜாமினுக்கு விண்ணப்பித்தார். ஆனால் அவர் கேரளா திரும்பினால் மட்டுமே அவரது ஜாமின் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது.
இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமையே கேரளா திரும்பி திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜராவதாக உத்தரவாதம் அளித்தார் விஜய்பாபு. ஆனாலும் சொன்னபடி திங்களன்று அவர் கேரளா திரும்பவில்லை இந்த நிலையில் கொச்சி விமான நிலையம் மூலம் கேரளா வந்தடைந்தார் விஜய்பாபு. விமான நிலையத்தில் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், நீதிமன்றத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும் உண்மை என்ன என்பது விரைவில் வெளிவரும் என்றும் கூறியுள்ளார்.