பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
பிரபல பின்னணி பாடகர் கேகே நேற்று (ஜூன் 1) மாரடைப்பால் திடீரென காலமானார். இந்த செய்தி இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரதமர் உள்ளிட்ட பல பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். பாலிவுட் பாடகராக அறியப்பட்ட கேகே என்கிற கிருஷ்ணகுமார் ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக தமிழில் அவர் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளன.
அதேசமயம் மலையாளத்தில் அவர், பிரித்விராஜ் நடிப்பில் 2009ல் வெளியான புதியமுகம் என்கிற படத்தில் இடம்பெற்ற ரகசியமாய் என்கிற ஒரே ஒரு பாடலை மட்டுமே பாடியுள்ளார். அதுமட்டுமல்ல கேரளாவை பூர்வீகமாக கொண்ட பாடகர் கேகே மலையாளத்தில் ஒரே ஒரு பாடலை பாடி இருப்பது தான் ஆச்சரியமான விஷயம்.
அந்த பாடலை பாடி கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு அவரிடம், நீங்கள் ஏன் மலையாளத்தில் பாடுவது இல்லை என அவரிடம் கேட்கப்பட்டபோது, “மற்ற மொழிகளை விட மலையாளத்தில் வார்த்தைகளை உச்சரிப்பது எனக்கு சற்று சிரமமானதாகவே இருக்கிறது, மற்ற மொழிகளில் பாடும்போது அவற்றுக்கு தோதாக எனக்கு ஏற்றவாறு அவற்றை மாற்றி எழுதி பாடிக்கொள்ள முடிகிறது. ஆனால் மலையாளத்தில் அவ்வாறு செய்ய முடிவதில்லை இத்தனைக்கும் நான் பேசும் மலையாளம் நன்றாக இருக்கிறது நீங்கள் பாடலாமே என்று பலரும் கூறினாலும் எனக்கு அது ஏற்புடையதாக தெரியவில்லை” என்று அப்போது கூறியிருந்தார் பாடகர் கேகே.