என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் | ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன் | ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி | பிளாஷ்பேக்: திருமண நாளில் படங்களை வெளியிட்ட கே.பாலாஜி | பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் |

தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் அடுத்ததாக வெளியாகும் விதமாக தயாராகி வரும் படம் 'மன சங்கர வர பிரசாத் காரு'. பிரபல இயக்குனர் அனில் ரவிபுடி இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இதில் சற்றே நீட்டிக்கப்பட்ட சிறப்பு தோற்றத்தில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கிறார். இவர்கள் இருவரும் தங்களது திரையுலக பயணத்தில் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிரஞ்சீவியும், வெங்கடேஷும் இணைந்து ஆடிப்பாடும் பாடல் ஒன்று தற்போது ஹைதராபாத்தில் மிகப்பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் பாடலில் கிட்டத்தட்ட 500 நடன கலைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். விஜய் போலகி இந்த பாடலுக்கு நடனம் வடிவமைத்து வருகிறார். ரசிகர்களுக்கு இவர்கள் இருவரும் இணைந்து ஆடும் இந்த பாடல் மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.




