பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
தெலுங்கு சினிமாவின் பரபரப்பான இயக்குனர் போயபதி சீனு. பத்ரா, துளசி, சிம்ஹா, லெஜண்ட், சரைனோடு, ஜெய ஜானகி நாயக உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர். கடைசியாக அகண்டா படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர். அடுத்து அவர் பான் இந்தியா படம் ஒன்றை இயக்குகிறார். இதில் ராம் பொத்தனேனி நடிக்கிறார். ராம் தற்போது தெலுங்கு, தமிழில் தயாராகி உள்ள தி வாரியர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை லிங்குசாமி இயக்கி உள்ளார்.
பான் இந்தியா படத்தை ஸ்ரீனிவாசா சிட்தூர தயாரிக்கிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. என்றாலும் நேற்று ஐதராபாத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் ராம் ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
படம் குறித்து தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்தூரி கூறியிருப்பதாவது: போயபத்தி சீனுவின் இயக்கத்தில் இப்படத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 'தி வாரியர்' படத்திற்குப் பிறகு ராம் பொத்தினேனியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்கள் பேனரில் வரும் மதிப்புமிக்க படமாக இருக்கும்.
இந்த படத்தை நாங்கள் உயர் தொழில்நுட்ப தரத்துடன் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கிறோம். படத்தை தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிட உள்ளோம். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிப்போம், என்றார்.