பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் |
அகண்டா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு என்.டி.பாலகிருஷ்ணா நடிக்கும் அவரது 107வது படத்த்தை கோபிசந்த் மலினேனி இயக்கி வருகிறார். பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் துனியா விஜய், வரலட்சுமி, ஹனி ரோஸ், லால் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமன் இசை அமைக்கிறார்.
50 சதவிவித படப்பிடிப்புகள் முடிந்திருந்தாலும் இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. என்பிகே 107 என்கிற தற்காலிக தலைப்போடு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்திற்கு அண்ணாரு என்ற தலைப்பு பரிசீலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஜெய் பாலையா என்ற தலைப்பு முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாலகிருஷ்ணாவை ஜெய் பாலைய்யா என்று அன்போடு அழைப்பார்கள். அதையே படத்திற்கு தலைப்பாக்க முடிவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.