தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

சின்னத்திரையில் இன்று பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை திவ்யா கணேஷ். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா மதுரையில் கல்லூரியை முடித்த பிறகு வக்கீலாகும் கனவோடு இருந்திருக்கிறார். அவருக்கு திடீரென சின்னத்திரை வாய்ப்பு கிடைக்கவே கேளடி கண்மனி தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். நடிகையான திவ்யாவிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷூடன் திருமணம் நிச்சயம் நடந்தது. ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக அது திருமணத்தில் முடியவில்லை. ஆர்.கே.சுரேஷ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த வருத்தத்திலிருந்து மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கும் திவ்யா, தற்போது விஜய் டிவியின் ஹிட் தொடரான பாக்கியலெட்சுமி தொடரில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். வக்கீலாக நினைத்தவர் இன்று பலருக்கும் பிடித்த பாக்கியலெட்சுமி ஜெனியாக வலம் வருகிறார்.