Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா பெற்ற மிக உயர்ந்த அங்கீகாரம்! பாடகி மஹதி 'பளிச்'

26 மார், 2023 - 11:08 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-received-the-highest-recognition!-Singer-mahathi

'நெஞ்சே, நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே' - இந்த பாடலை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா... இது போன்ற பாடல்களால், இசைப்பிரியர்களை தனது வசியக்குரலால் கட்டிப்போட்டவர் பின்னணி பாடகி மஹதி. திரையிசையில் மட்டும் இன்றி கர்நாடக சங்கீதத்திலும், பலரையும் வசீகரித்துக் கொண்டுள்ளார். தினமலர் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:
நான் 2001ம் ஆண்டு முதல், இசைத்துறையில் இருந்து வருகிறேன். அந்த காலகட்டத்தில் வாய்ப்புகள் மிகவும் குறைவு. பல பாடல்கள் பாடி, அவை வெற்றி பெற்ற பின்னரே பிரபலமடைய முடியும். குறிப்பாக, அப்போது 'ரியாலிட்டி ஷோ' க்கள் கிடையாது. ஒன்றிரண்டு மட்டுமே இருந்தன. ஆனால், தற்போதுள்ள இசை கலைஞர்களுக்கு இத்தகைய நிகழ்ச்சிகள் ஏராளமாக உள்ளன. இது, அவர்களுக்கு மிகவும் உதவுகிறது. பிரபலமான இசையமைப்பாளர்களிடம் பாட வேண்டும் என்பதை தாண்டி, இன்று பலரும் தாங்கள் பிரபலமாக வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்கு இவை அதிகம் உதவுகிறது. இன்றைய இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

வாய்ப்புகள் கிடைத்தாலும், நிலைத்து நிற்க முடிகிறதா?
பல பாடகர்களின் பாடல்கள், வரலாற்றில் நிலைத்து நிற்கின்றன. அதற்கு காரணம் அவர்களது உழைப்பு. இன்று வாய்ப்புகள் என்பது குவிந்து கிடக்கின்றன. ஆனால், அவர்கள் நிலைத்து நிற்பது என்பது குறைந்து விட்டது.
தகுதியானவர்கள் மட்டுமே நிலைத்து நிற்கின்றனர். இந்த போட்டியில் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். நீண்ட காலம் நிலைத்து நிற்க, பலரும் முயற்சிப்பதில்லை. தற்போது பல புதிய குரல்கள் கேட்கின்றன. அவர்கள் நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும்.

கர்நாடக இசை, மேற்கத்திய இசை இதில் எதில் வாய்ப்பு அதிகம்?
கர்நாடக இசைக்கு மிகவும் பொறுமை அவசியம். கணக்கு போன்றது. அது நமக்கு பிடித்தால் மட்டுமே சாதனைகள் புரிய முடியும். கர்நாடக இசையில், அங்கீகாரம் என்பது நீண்ட காலத்துக்கு பின்னரே கிடைக்கும். அதற்கான பொறுமை அனைவரிடமும் இருக்குமா என்பது சந்தேகமே. ஆனால், அங்கீகாரம் கிடைத்து விட்டால், வேறு நிலைக்கு சென்று விடுவோம். மேற்கத்திய இசையில் அப்படி இல்லை. எளிதில் கற்றுக் கொள்ளலாம். அதில் எளிதில் சாதிக்க முடியும். நிலைத்து நிற்பது அவரவர் முயற்சியில் மட்டுமே உள்ளது.

இன்றைய இளைஞர்கள் ஏராளமானோர் இசைத்துறைக்கு வருகின்றனர். அதனால், அதன் பாரம்பரியம் நீர்த்து போய்விடாதா?
ஏராளமான கலைஞர்கள் வருவது ஆரோக்கியமான விசயம். திறமையானவர்களுக்கு வெற்றி எளிதில் கிடைத்து விடுவதில்லை. இன்று சமூக வலைதளங்களில் என்ன போட்டாலும், அது 'லைக்' செய்யப்படுகிறது. இது அனைவராலும் விரும்பப்படுகிறது. திறமையானவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

கீரவாணிக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறித்து...
கீரவாணியின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த ஒரு பாடலை தவிர, மலையாளத்தில் தேவராகம் பாடல் முதல், இன்று வரை பல பாடல்களை அவர் இயற்றியுள்ளார். அவரது இத்தனை ஆண்டு உழைப்புக்கு, கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறேன். நாடே கொண்டாடுகிறது. இது இந்தியாவுக்கு கிடைத்த அங்கீகாரம்.

சிம்பொனி இசைத்த இளையராஜாவுக்கு, இதுபோன்ற உயரிய விருதுகள் கிடைக்கவில்லை என்ற பேச்சு உள்ளதே?
இது ஒரு மிக தனித்துவமான விஷயம். ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட விருப்பு இருக்கும். அந்த ஒரு பாடலுக்காக ஆஸ்கர் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக இளையராஜா பெரிய இசையமைப்பாளர் இல்லை என்று சொல்லி விட முடியாது. காலம் மாறிக் கொண்டுள்ளது. அங்கீகாரம் என்பது அந்தந்த தேர்வுக்குழுவை சார்ந்தது. நம் நாடு என்றில்லை; வெளிநாடுகளில் வாழும் ஒவ்வொரு தமிழனும், காலையில் எழுந்தது முதல் வேலைக்கு போகும் போதும், அனைத்து செயல்களிலும், இளையராஜா பாடல்களை கேட்டுக் கொண்டு தான் இருப்பர். இது, ஆஸ்கரை விட மிக உயர்ந்த அங்கீகாரம். நார்வேயில் 'நாட்கேப்' என்ற ஒரு இடத்துக்கு சென்ற போது, 'பனிவிழும் மலர் வனம்' பாடலை கேட்டுக் கொண்டு, கார் ஓட்டிக் கொண்டிருந்தார். இதுதான் அங்கீகாரம். இதற்கு மேல் என்ன வேண்டும். விருதுகளால் திறமையை எடை போட முடியாது.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மனைவியுடன் பிரிவு ; சோசியல் மீடியாவில் அறிவித்த திமிரு நடிகர்மனைவியுடன் பிரிவு ; சோசியல் ... பேசவிடாமல் தடுத்ததால் அப்செட்: ஆஸ்கர் விருது பட தயாரிப்பாளர் சபதம் பேசவிடாமல் தடுத்ததால் அப்செட்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Lakshmanan - Sivagangai,இந்தியா
28 மார், 2023 - 09:43 Report Abuse
Lakshmanan உண்மை ""என்பது இயற்கை போன்றது.அதற்கு போட்டி என்பது கிடையாது. இங்கிருந்து எடுக்கப்பட்டுதான் ""செயற்கை மாற்றம் பெறுகிறது. எனவே இயற்கைக்கு ஈடு , இணை என்பது எதுவும் இல்லை இவ்வுலகினில். எனது வேலையில் தனித்துவம்""இருந்தால் மட்டுமே சிறந்த வேலைக்காரன் என்பார்கள். மாறாக நான் வேலை செயதாலும் திறமை இருப்பது போல பாசாங்கு செய்தால (காப்பியடிப்பது ) தனித்துவம் இருக்காது.எனவே அது நீடித்து நிலைக்காது. மேலைநாட்டவரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இசைக்கு ஆஸ்கார். தனித்துவம் இலலாமல் இதற்கு முன்ளர் பாலிவுட் /ஹாலிவுட் இசையைக் காப்பியடித்து ஆஸ்கார் விருது வாங்கியுள்ளனர். இரண்டாவதாக இப்பொழுது பணம் கொடுத்து ஆஸ்கார் விரருது வாங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவருவதாக மக்கள் புலம்புகின்றனர். ஏன் இந்த புழப்பு /வெற்று அங்கீகாரம் எனவும் கூறுகின்றனர். சமீபத்தில் கூட "போலியான"டாக்டர் பட்டம் தரப்படுவதாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். வெளிநாட்டினரின் உணர்வுகள் உண்மை. அது போல எங்கள் மண்ணின் உணர்வுகளும் உண்மை.அதனை இயற்கையான இசை உணர்வாகநத் தந்த இசைக்கடவுள் எங்கள் இளையராஜா. உண்மை- தனித்துவம் (இளையராஜா ) என்றென்றும் சாகாது. போலியான இசை சாகும்.
Rate this:
N.Palaniyappan - Karaikal ,இந்தியா
26 மார், 2023 - 14:42 Report Abuse
N.Palaniyappan ந.பழனியப்பன், காரைக்கால் திரு.இளையராஜா போன்ற இசை மேதைகள் ஆஸ்கார் விருது வழங்கும் தேர்வு குழுவில் இருக்க வேண்டியவர். உலக மக்களின் மனங்களில் சிறந்தவர். 1500 படங்களுக்கு மேல் இசையமைத்தவர். இதற்கே இவருக்கு ஆஸ்கார் கொடுத்திருக்க வேண்டும்..
Rate this:
Ramar - Tirupur,இந்தியா
26 மார், 2023 - 14:15 Report Abuse
Ramar இந்த இசையுலகில் இளையராஜா என்ற விருதே மிக பெரிய விருது.....
Rate this:
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
26 மார், 2023 - 11:39 Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan அறிவார்ந்த பேச்சு. வாழ்த்துக்கள். மேலும் வளர மேலும் வாழ்த்துக்கள். உங்கள் திறமைகளை அடுத்த இளம் தலைமுறைக்கு கற்றுக்கொடுங்கள். 10 பேரில் ஒருவராவது உங்கள் பெயர் சொல்லும்படி கண்டிப்பாக முன்னுக்கு வருவார். ஒரு கலைஞருக்கு அதுவே சிறப்பு. நன்றி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Kallapart
  • கள்ளபார்ட்
  • நடிகர் : அரவிந்த் சாமி
  • நடிகை : ரெஜினா
  • இயக்குனர் :ராஜபாண்டி
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in