'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழில் விஷால் நடித்த திமிரு படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக நடித்திருந்தவர் மலையாள நடிகர் விநாயகன். மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் வித்தியாசமான வசன உச்சரிப்புடன் தனது முதல் தமிழ் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது மனைவியிடம் இருந்து தான் பிரிந்து விட்டதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் விநாயகன்.
இது குறித்து விநாயகன் அந்த வீடியோவில் கூறும்போது, “எனக்கும் என் மனைவிக்கும் இடையிலான அனைத்து திருமண உறவுகளும் சட்ட உறவுகளும் இந்த தருணத்தில் இருந்து முடிவுக்கு வருகின்றன” என்று கூறியுள்ளார். விநாயகனை பொறுத்தவரை, அவரது நடிப்பிற்காக பலராலும் பாராட்டப்பட்டாலும் பெரும்பாலும் பொதுவெளியில் ஏதாவது பேசி சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருப்பவர். கடந்து சில மாதங்களுக்கு முன்பு கூட பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் மரியாதை குறைவாக பேசி பின் அதற்காக மன்னிப்பு தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.