‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் |

தமிழ் டிவி உலகில் பிரபலமான தொகுப்பாளினி மணிமேகலை. தனியார் மியூசிக் சேனலில் முதன் முதலில் அறிமுகமாகி, பின் விஜய் டிவி பக்கம் தாவி அங்கு மிகவும் பிரபலமானவர். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக தனது தனித் திறமையால் ரசிகர்கள் பலரைக் கவர்ந்தவர். மற்ற ஆண் கோமாளிகளுக்கு இணையாக நல்ல பேரை வாங்கிய பெண் கோமாளியாகவும் இருந்தார்.
நடந்து முடிந்த 'குக் வித் கோமாளி' சீசனில் தொகுப்பாளராகப் பணியாற்றினார் மணிமேகலை. நிகழ்ச்சி முடிவடைய சில வாரங்கள் இருந்த நிலையில் அந்நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக வெளியேறினார். அதன் காரணம் என்ன என்பதைத் தெரிவித்து வீடியோவையும் பதிவிட்டிருந்தார். கடந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராகப் பணியாற்றிய பிரியங்கா தேஷ்பாண்டே, மணிமேகலையின் தொகுப்பாளர் பணிகளில் தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பின் வேறு எந்த டிவி பக்கமும் போகாமல் இருந்தார் மணிமேகலை. தற்போது ஜீ தமிழ் டிவியில் நுழைந்துள்ளார். 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' தொகுப்பாளராக மாறியிருக்கிறார். அது குறித்த தகவலையும், சில புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் மணிமேகலை. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.