2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ரஜினி கிஷன், மலையாள நடிகை திவிகா நடிக்கும் படம் ரஜினி கேங். படத்துக்கு ஏன் இந்த தலைப்பு. ஹீரோ உண்மயைான பெயர் ரஜினி கிஷனா என்பதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் இயக்குனர் எம்.ரமேஷ் பாரதி. இவர் கூறுகையில், ‛‛காமெடி, ஹாரர், எமோசன் நிறைந்த படம் ரஜினிகேங். இந்த படத்துக்கு என்ன டைட்டில் வைப்பது என நிறைய விவாதித்தோம். அப்போது ஹீரோ கிஷன் தனது பெயரை ரஜினி கிஷன் என மாற்றினார். அதனால் அவர் கதாபாத்திரத்திற்கும் ரஜினி எனப் பெயர் வைத்தோம். கதைப்படி, அவரின் பயணமும் அவருக்கு உதவும் கேங்கும் தான் இந்தக்கதை, அதனால் ரஜினி கேங் என வைத்திவிட்டோம்.
ரஜினி என்றாலே பவர் என்பதால் எல்லோருக்கும் பிடித்துவிட்டது. நிறைய ஹீரோயின் தேடி கடைசியாக திவிகா வந்தார். மொட்டை ராஜேந்திரன், முனீஷ்காந்த் என எல்லா நடிகர்களும் எல்லோரும் இரவு பகல் பாராமல் நடித்து தந்தார்கள் என்றார்.
பேய் பிடித்த ஹீரோயின் என்ன செய்கிறார். அவர் மீது வரும் பெண் பேய் யார்? நண்பர்கள் சேர்ந்து அந்த பேயை எப்படி துரத்துகிறார்கள் என்ற ரீதியில் கதை நகர்கிறதாம். இதில் பெண் வேடத்தில் சில காட்சிகளில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார்.